Type to search

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து உயிரிழப்பு

India Trending Tamil nadu

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து உயிரிழப்பு

Share

திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு செய்வதாக நடிகை நிலானி புகார் அளித்த நிலையில், அவரது ஒருதலை காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.serial actress nilaani oneside lover’s suicide

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, காவலர் உடையில் இருந்தவாறு கருத்து தெரிவித்த சின்னதிரை நடிகை நிலானி, கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

அவர் சென்னை மயிலாப்பூரில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, தமது நண்பர் காந்தி லலித்குமார் என்பவர், தம்மை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து தொந்தரவு செய்வதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காந்தி லலித்குமாரை பிடித்து விசாரித்த போலீசார், இனி நிலானியைத் தொந்தரவு செய்வதில்லை என அவர் உறுதியளித்ததால், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், காந்தி லலித்குமார் கே.கே.நகர் பகுதியில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலமாக காந்தி லலித்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த தீக்காயமடைந்த காந்தி லலித்குமாருக்கு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவர் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like