Type to search

பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது

India Trending Tamil nadu

பயணிகளின் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது

Share

சென்னையில் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.railway employee arrested stealing passengers

அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சிவமூர்த்தி, விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் பாயிண்ட் மேனாக (Point Man) பணியாற்றி வந்தார்.

இவர் சென்னையிலிருந்து பேரணி ரயில் நிலையத்துக்கு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து சென்னை வரும் ரயில் பயணிகளின் செல்போன் திருடுபோனதாக, தொடர்ந்து எழும்பூர் ரயில்வே போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன.

சிவமூர்த்தி மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் இருப்பதால், சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, ரயிலில் அயர்ந்திருக்கும் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்ததாக சிவமூர்த்தி ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த ரயில்வே போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஸ்மார்ட்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like