Type to search

ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

India Head Line India Trending Tamil nadu

ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

Share

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி பெறப்பட்டது.h.raja appear person 4-weeks – high court order

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோயில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 15-ம் தேதி பிற்பகல் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தைப் பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மெய்யபுரம் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகச் செல்ல பொதுமக்கள் முயன்றனர். மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகக் கூறி போலீஸார் தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹெச்.ராஜாவுக்கும் போலீஸாருக்கும் இடையே நீண்ட வாக்குவாதம் நடைபெற்றது. இதன் முடிவில் விநாயகர் ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீஸார் அனுமதி வழங்கினர்.

ஹெச்.ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா போலீஸாரிடம் உயர்நீதிமன்றத்தையும் தமிழக காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவில் உள்ளது. தனது குரல் இல்லை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தைத் தரக்குறைவாக பேசியுள்ளார் என அனைவரும் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.டி செல்வம் அடங்கிய அமர்வு நான்கு வாரத்துக்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like