Type to search

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்

INDIA India Top Story India Trending

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்

Share

பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே விண்ணில் செலுத்தப்படும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் நேற்று இரவு இருளிலும் வெற்றி பயணத்தை தொடர்ந்தது.bounced sky bslv c-42 rocket

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நேற்று இரவு 10 மணி 8 நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இங்கிலாந்து நாட்டின் நோவாசார் மற்றும் எஸ் ஒன் ஃபோர் (S1- 4) ஆகிய 2 செயற்கைகோள்களை சுமந்தபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோமீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட, 445 கிலோ எடைகொண்ட நோவாசர் செயற்கைகோள் காணாமல் போன கப்பல்களை கண்டுபிடிப்பது மற்றும் பேரிடர் குறித்த கண்காணிப்புக்கும், 444 கிலோ எடைகொண்ட எஸ்1- 4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிக்காகவும் தயாரிக்கப்பட்டவை.

வர்த்தக ரீதியில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள்களின் மூலம் இஸ்ரோவுக்கு 220 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இரவு நேரத்தில் ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட திட்டமும் வெற்றியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என தெரிவித்தார்.

மேலும் அடுத்த 6 மாதங்களில் 10 செயற்கைகோள்களும், 8 ராக்கெட்களும் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் கூறினார்.

சந்திரயான் 2 செயற்கைகோளை அடுத்தாண்டு ஜனவரி 3 முதல் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

bounced sky bslv c-42 rocket

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: