Type to search

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ‘டி20′ வியூகத்துடன் களமிறங்கும் பா.ஜ.க

INDIA India Head Line India Trending

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ‘டி20′ வியூகத்துடன் களமிறங்கும் பா.ஜ.க

Share

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளக் குறைந்த மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.bjp ‘t20’ strategy deal opposition parties

அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கும், எதிர்க்கட்சிகளும் பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பல தலைவர்களும் பலத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி அவர்களை முறியடிக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலில் சமூகவலைதளங்கள் மூலம் தங்கள் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முனைப்புக் காட்டி வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் போராடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது பா.ஜ.க.

இதனால் வரும் தேர்தலை எதிர்கொள்ள ‘டி20 வியூகம்’ என்ற முறையைக் கையாள உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது பிரபல கிரிக்கெட் தொடர் போல இல்லாமல் சற்று மாறுபட்டது.

பா.ஜ.க-வின் டி20 படி அக்கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ உட்பட வாக்குச் சாவடி பணியாளர்கள் வரை அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள 20 வீடுகளுக்கு நேரே சென்று, நான்கு வருட பா.ஜ.க ஆட்சியின் சிறப்புகள் மற்றும் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதே அது.

இந்த வியூகத்தின் மூலம் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் பா.ஜ.க-வின் சிறப்பு சென்று சேரும் என்பதே அக்கட்சியின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நமோ செயலி, ஒரு சாவடிக்கு 10 இளைஞர்கள் என பல்வேறு திட்டங்களைக் கையில் வைத்துள்ளது பா.ஜ.க.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: