Type to search

மதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்

India Trending Tamil nadu

மதுரையை உழுக்கிய பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி இன்று சரண்

Share

பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சபா என்ற சபாரத்தினம் (25) இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.pottu suresh culprit today murder case madurai

திமுக பிரமுகரும், மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவராவகவும் திகழ்ந்த சுரேஷ் என்ற பொட்டு சுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சந்தானபாண்டியன், காசிமாயன் ஆகியோர் அடங்கிய தனிப்படைக்குழு தீவிரமாக
தேடிவந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் விளாங்குடி அருகே கரிசல்குளம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த செந்திலை தனிப்படை போலீஸார் விரைந்து சென்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கிடையே இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபா என்ற சபாரத்தினம் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like