Type to search

மணமகளுக்காக தட்டிக் கேட்ட தாய்மாமன் அடித்து கொலை

India Trending Tamil nadu

மணமகளுக்காக தட்டிக் கேட்ட தாய்மாமன் அடித்து கொலை

Share

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் நேற்று முன் தினம் திருமணமான புதுமண தம்பதி செந்தில்வேலு, ஈஸ்வரி ஆகியோருக்கு, தாய்மாமன் வீட்டில் கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.uncle listening bride beaten killed

தாய்மாமன் முருகவேல் வீட்டின் முன்பகுதியில் வைத்து விருந்து அளித்ததாக தெரிகிறது.

அப்போது உணவு பரிமாறிய பெண்ணின் தங்கையை 7 பேர் கொண்ட கும்பல் தவறாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதனை தாய்மாமன் தங்கவேலு தட்டிக் கேட்டுள்ளார். இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கும்பல் கற்கள், கட்டையால் முருகவேலை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த தங்கவேலுவை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அ.முக்குளம் போலீசார் விசாரித்தனர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like