Type to search

சாலை விபத்தில் அடிபட்டது போல் நடித்து வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

India Trending Tamil nadu

சாலை விபத்தில் அடிபட்டது போல் நடித்து வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

Share

சென்னை ராயபுரத்தில் விபத்தில் அடிபட்டது போல் நடித்து தலைமைக் காவலரிடம் செல்போன் பறித்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.robbers acted like road crash

ராயபுரத்தில் பாலத்தில் விபத்தில் அடிபட்டுக் கிடப்பது போல் ஒருவன் கிடந்துள்ளான். இதை நிஜம் என நம்பிய திருவொற்றியூர் காவல்நிலைய தலைமைக் காவலர் பாலசுப்ரமணியம் பதற்றத்துடன் மீட்கச் சென்றார்.

சாதாரண உடையில் இருந்த அவரை காவலர் என அறியாத வழிப்பறிக் கொள்ளையர்கள், அவரிடம் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றனர்.

உடனடியான விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் பால சுப்ரமணியம், அவர்களில் கார்த்திக் என்பவனை மட்டும் மடக்கிப் பிடித்தார்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு, ராயபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து அடிபட்டது போல் நடித்த டேனியலையும், செல்போனைப் பறித்துச் சென்றதாக சதீஷையும் கைது செய்த போலீசார் மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like