Type to search

கேட்பாரற்று நின்றிருந்த லாரியில் 5 டன் செம்மரக்கட்டைகள்

India Trending Tamil nadu

கேட்பாரற்று நின்றிருந்த லாரியில் 5 டன் செம்மரக்கட்டைகள்

Share

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே சாலையோரம் கேட்பாரற்று நின்றிருந்த லாரியில், 5 டன் செம்மரக்கட்டைகள் பிடிபட்டன.5 tons cemmarakkattai lorry standing alone police enquire

எளாவூர் பகுதியில் சாலையோரம் நீண்ட நேரம் நின்றிருந்த லாரியில், ஆரம்பாக்கம் போலீசார் சோதனை செய்தனர். லாரியில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஆரம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ஆந்திர வனப்பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகளை, சென்னைக்கு எடுத்து சென்று கப்பல் மூலம் சீனாவிற்கு கடத்தும் முயற்சி நடைபெற்றிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 5டன் எடை கொண்டவை என்றும், இவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. லாரி உரிமையாளர் பாலுவை தேடி வருவதாகவும், செம்மரக்கடத்தல் கும்பல் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: