Type to search

அருண் ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பகீர் – ஜேட்லியை காப்பாற்றப்போகும் ரட்சகன் யார்?

INDIA India Head Line India Trending

அருண் ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பகீர் – ஜேட்லியை காப்பாற்றப்போகும் ரட்சகன் யார்?

Share

லண்டன் செல்வதற்கு முன்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா பகிரங்கமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று அருண் ஜேட்லி பதவி விலக வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் வலியுறுத்தல் வலுக்கத் தொடங்கியுள்ளது.vijay mallya shocking – savior save Jatli?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 இந்திய வங்கிகளில் பெற்ற 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரி மத்திய அரசு சார்பில், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு லண்டன் WESTMINSTER  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  விசாரணையில் போது பேசிய மல்லையா, தம்மை அடைக்கவுள்ள இந்திய சிறைகளின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அடிப்படை வசதியற்ற இந்திய சிறையில் தம்மால் இருக்க முடியாது எனவும் கூறினார்.

இதையடுத்து, இந்திய சிறைகளின் நிலையை வீடியோவாக பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து,  மும்பை ஆர்த்தர் சாலை 12வது  சிறை அறையின் அமைப்பானது  10 நிமிட வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சிபிஐ மூலம் லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வீடியோவில், நவீன கழிவறை, 6 டியூப் லைட்டுகள், 3 மின்விசிறிகள், 15 அடி உயர மேற்தளம், வெண்மை நிற பூச்சு மற்றும் 40 இன்ச் LCD TV உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோ சமர்ப்பிக்கப்பட்டதன் பிறகான விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மல்லையா, செய்தியாளர்களை வழக்கம் போல் புறக்கணிக்காமல், திடீரென அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியாவை விட்டு வெளியேறும் முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை  2 முறை சந்தித்து பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடனை திரும்ப செலுத்துவதாக தாம் வழங்கிய கடிதங்களை வங்கிகள் நிராகரித்தாகவும் அவர் தெரிவித்தார்.

லண்டனுக்கு நான் செல்லவுள்ளதை ஜேட்லியிடம் நாடாளுமன்ற கூட்டத்தின் போது தெரிவித்திருந்தேன்… வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குமாறு  கேட்டுக்கொண்டிருந்தேன்…

அவரை திட்டமிட்டு நான் சந்திக்கவில்லை. நாடாளுமன்றத்தில் திடீரென தான் அவரை சந்தித்தேன்… கடன்களை அடைப்பது குறித்து பலமுறை அவரிடம் கூறியுள்ளேன். இது சர்ச்சையானது ஏன் என புரியவில்லை…

தொடர்ந்து பேசிய அவர், லண்டனுக்கு தாம் தப்பியோடவில்லை என்றும், தம்மைச் சுற்றி  சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் புழங்குவதாகவும் கூறினார்.

ஜெனிவா மோட்டார் ஸ்போர்ட்ஸ் சபையில் கலந்துகொள்ளவே நான் லண்டன் சென்றேன்… ஆனால், நான் இந்தியாவிலிருந்து தப்பியோடியதாக சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன… ஜேட்லியை சந்தித்து லண்டன் பயணம் குறித்து மட்டுமே பேசினேன். வேறு எதைப்பற்றியும் பேசவில்லை

மல்லையாவின் இந்த பகீர் தகவலால், அருண் ஜெட்லி அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 3 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அண்மையில் தான் மீண்டும் மத்திய அமைச்சர் இருக்கையில் அமர்ந்தார்.

அதற்குள் மல்லையாவின் தகவல் அம்பு, ஜேட்லியின் இருக்கையைக் குறி வைத்து பாய்ந்துள்ளது. மல்லையாவுடனான சந்திப்பு குறித்து ஜேட்லி இதுவரை வாய் திறக்காத நிலையில் தேசிய அரசியலில் தற்போது புயல் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், உண்மையை மறைத்து குற்றவாளியை தப்பிக்க வைக்க உதவிய ஜேட்லியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், தவறுக்கு பொறுப்பேற்று அருண் ஜேட்லி தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மற்ற எதிர்கட்சிகளின் தலைமைகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஜேட்லிக்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய தலைவலிக்கு நிவாரண தைலம் தேடும் பணியில் மத்திய அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், ஜேட்லியை காப்பாற்றப்போகும் ரட்சகன் யார் என்று.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like