Type to search

எழுவர் விடுதலை – கால் நூற்றாண்டு சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை

India Top Story India Trending Tamil nadu

எழுவர் விடுதலை – கால் நூற்றாண்டு சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை

Share

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு, இன்னும் சிறைக்கதவுகளின் வழியே விடியலுக்காக 7 பேர் ஏங்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.elvar liberation path quarter-century legal battle

கால் நூற்றாண்டாக நடந்து கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கான சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

*1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

*1992-ம் ஆண்டு மே 20-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த சிபிஐ-ன் சிறப்பு புலனாய்வுக்குழு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

*வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

*தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி நளினி, சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரணதண்டனையை உறுதி செய்தது.

ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இவர்கள் 7 பேர் தவிர மற்ற 19 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

*பேரறிவாளன், நளினி, சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதித்த மரணதண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இது தொடர்பான மனுக்களை 1999-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*நால்வரும் தமிழக ஆளுநரிடம் 1999-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். நால்வரின் கருணை மனுக்களையும் தமிழக ஆளுநர் நிராகரித்தார்.

*மீண்டும் நீதிமன்றத்தை நால்வரும் நாடினர். கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்த நடவடிக்கையை 1999-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக அமைச்சரவையின் கருத்துக்களின் அடிப்படையில், புதிய உத்தரவைப் பிறப்பிக்கவும் ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

*2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை, நளினியின் மரணதண்டனையை ரத்து செய்ய பரிந்துரைத்தது. இதனை 2000-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஆளுநர் ஏற்றார்.

*பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலிக்குமாறு குடியரசுத்தலைவருக்கு தமிழக அமைச்சரவை 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பரிந்துரைத்தது.

*3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்து விட்டார் என்ற தகவலை, 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

*மூவரையும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து தமிழகம் போர்க்கோலம் பூண்டது.

*தமிழக சட்டமன்றம் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி கூடி, மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசு தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதே நாளில் மூவரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மரண தண்டனைக்கு தடை விதித்தது.

*மரண தண்டனையை ரத்து செய்யக்கோரும் மூவரின் மனுக்கள் உச்சநீதிமன்றம் சென்றது. மனுக்களை 2012-ம் ஆண்டு, மே 1-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

*சுமார் 2 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலிக்க சுமார் 11 ஆண்டுகள் தாமதம் என்பது, தேவைக்கதிகமான காலதாமதம் எனக் குறிப்பிட்டு, மூவரின் மரண தண்டனையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இது தான் 7 பேரின் விடுதலை மீதான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

*7 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

*தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றது. ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலை செய்து இரட்டை பலன் வழங்க முடியாது என மத்திய அரசு கூறியது.

சிபிஐ விசாரித்த வழக்கில், மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை விடுவிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

*7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதியது. இந்நிலையில் தமிழக அரசின் கடிதங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

*7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தனது தீர்ப்பை அறிவித்தது.

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் கூறியது.

*7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like