Type to search

திருவள்ளூரில் ஒரு குடம் குடிதண்ணீர் ரூ.10 – பொதுமக்கள் அவலம்

India Top Story India Trending Tamil nadu

திருவள்ளூரில் ஒரு குடம் குடிதண்ணீர் ரூ.10 – பொதுமக்கள் அவலம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.pitcher thiruvallur drinking water rs10 civic people

இங்கு, கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எப்போதாவது வரும் குடிநீரில், கழிவுநீர் கலந்திருப்பதாகவும், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

இதனால், டிராக்டரில் கொண்டு வரப்படும் குடிதண்ணீரை, ஒரு குடத்திற்கு 5 முதல் 10 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

மேலும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் அரியன்வாயல் பகுதியில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவும் அபாயம் உள்ளதால் பேரூராட்சி ஊழியர்கள் கால்வாய் அடைப்பை உடனடியாக சரிசெய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like