Categories: INDIAIndia Top StoryIndia Trending

நாடு தழுவிய பந்த் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.nationwide pande petrol-diesel price hike congress

15 ஆண்டுகளாக மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் மாற்றியமைக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மே மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஆனால், அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே சென்றது. வரலாற்றில் இல்லா புதிய உச்சமாகக் கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகாவது பெட்ரோல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் தொடர்ந்து உச்சம் பெற்றே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 80 ரூபாயாக உயர்ந்த பெட்ரோல் விலை சில காசுகள் மட்டும் உயர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி 80.94 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 7-ம் தேதி) பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

10 நாள்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கலால் வரி மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

8 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

11 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

11 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

12 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

12 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

13 hours ago