Categories: INDIAIndia Trending

பாஜக எம்.எல்.ஏ நாக்கை அறுத்துவந்தால் 5 லட்சம் பரிசு – முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்

மும்பையில் பெண்களை கடத்துவேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏவுக்கு கண்டனங்கள் வலுத்துவருகிறது.bjp mla tongue cut 5 lakh prizes – former Congress minister

இந்நிலையில் அந்த பாஜக எம்.எல்.ஏவின் நாக்கை அறுத்து வந்தால் 5 லட்சம் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

மும்பை கட்கோபரில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், ”இளைஞர்களே உங்களை பெண்கள் காதலிக்கவில்லை என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை நான் கடத்திவந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக்கூறி என்னுடையா மொபைல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள் எனவும் கூறி நம்பரை கொடுத்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மும்பையில் பல இடங்களில் பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயலை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதேபோல் மாநில மகளீர் ஆணையம் 8 நாளில் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தேசிய மகளீர் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைமை அவரை மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கியுள்ளது மேலும் பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கூடாது எனவும் அறிவுரை கூறியுள்ளது பாஜக தலைமை.

காங்கிரஸ் தரப்பும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவருகிற நிலையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுபோத் சாவ்ஜி கூறுகையில்,ஒரு எம்.எல்.ஏவிடம் இருந்து இதுபோன்ற கருத்துக்கள் வருவது ஏற்கத்தக்கதல்ல எனவே பாஜக அவரின் நாக்கை அறுத்து வந்தால் 5 லட்சம் பரிசு என கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

8 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

9 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

10 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

11 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

12 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

13 hours ago