Type to search

எங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்

India Trending Tamil nadu

எங்க அண்ணா மேலையா கை வச்ச… – பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது.attacked brother jail – police girl spoil rowdy bullet nagaraj

இவரது அண்ணன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து புல்லட் நாகராஜனின் அண்ணனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.பி. ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜ் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சிறைக்குள் இருந்து வெளியில் வந்தால் வீடு திரும்ப முடியாது என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தனது அண்ணனைப் போல் தான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், இந்த சம்பவத்திற்கு நீதிப்படியும் வேறுவிதமாகவும் கட்டாயம் தண்டிப்பேன் என்றும் புல்லட் நாகராஜ் மிரட்டியுள்ளார்.

எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: