Categories: India TrendingTamil nadu

வேளச்சேரி ரயில் தண்டவாளத்தில் 2வது முறையாக சிமென்ட் ஸ்லாப் – ரயிலைக் கவிழ்க்க சதி?

சென்னை வேளச்சேரி-கடற்கரை மார்க்க பறக்கும் ரயில் தண்டவாளத்தில் கடந்த 5 நாட்களில் 2வது முறையாக சிமென்ட் ஸ்லாப் வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த விஷமிகளை ரயில்வே போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.cement slab 2nd time velachery railway tracks – plot topple train

சென்னை பெருங்குடி-தரமணி பறக்கும் ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் நேற்று விஷமிகள் சிமென்ட் ஸ்லாப் ஒன்றை வைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று அந்த மார்கத்தில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற பறக்கும் ரயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் பொருள் ஒன்று இருப்பதை பார்த்து வேகத்தை குறைத்துள்ளார். இருந்தபோதும், சிமென்ட் ஸ்லாப்பின் மீது ரயில் ஏறி இறங்கியது.

இதையடுத்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அங்கு சென்று உடைந்து நொறுங்கி கிடந்த சிமென்ட் ஸ்லாப்பை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் 10 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்ட ரயில் கடற்கரை நோக்கி சென்றது.

ஏற்கெனவே கடந்த 31-ம் தேதி இதேபோல வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறிய அளவிலான ஸ்லாப் ஒன்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது.

அதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே சென்று நேற்று பகல் ஆய்வு செய்தார்.

வெளியிடங்களில் இருந்து தண்டவாள பகுதிக்குள் புகாதவாறு கட்டுமானங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவே தண்டவாளத்தில் மீண்டும் சிமென்ட் ஸ்லாப் வைத்து விபத்தை ஏற்படுத்தும் சதி நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பி. ரவி தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் இரவு நேரங்களில் பறக்கும் ரயில் தண்டவாள பகுதியில் ரோந்தில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் இரண்டு முறை பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லாப் வைக்கப்பட்டது, ரயில் ஓட்டுநர்கள் மட்டுமின்றி ரயில் பயணிகளையும் அச்சமடையச் செய்துள்ளது.

பெரியளவில் விபத்து நடைபெறும் முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

3 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

5 hours ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

6 hours ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

7 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

7 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

8 hours ago