Categories: India TrendingTamil nadu

பாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது – மாணவர்கள் போராட்டம்

பாஜக அரசை விமர்சனம் செய்த ஆராய்ச்சி கல்லூரி மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் வெடித்தது.sophia arrested bjp government criticizing students

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் நேற்று தமிழிசை சவுந்திரராஜனும் பயணம் செய்தார்.

15 நாட்கள் காவல் :

அப்போது பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று மாலையே அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பரபரப்பு :

இதை கண்டித்து திருவாரூர் மாவட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதேபோல் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவர்கள் சோபியாவுக்கு ஆதவாக முழக்கமிட்டு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழிசை :

தூத்துக்குடியை சேர்ந்த சோபியா கனடாவில் ஆராய்ச்சி மாணவியாவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை கேள்விப்பட்ட அவர் அந்த விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்தவுடன் கோஷமிட்டுள்ளார்.

ஹேஷ்டேக் :

மேலும் மாணவி சோபியா கோஷமிடுவதற்கு முன்னர் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுபோல் கோஷமிடவுள்ளதாக குறிப்பிட்டுவிட்டுதான் கோஷமிட்டுள்ளார்.

இதனால் பாசிசபாஜகஒழிக என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

32 mins ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

1 hour ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

2 hours ago

மோடியின் எஜமானர் மக்களா? அம்பானியா? – ரஃபேல் விமான ஊழலில் புதிய ட்விஸ்ட்!

அம்பானிதான் இந்தியா இந்தியாதான் அம்பானி என்ற நிலையை உருவாக்குவதற்கு மோடி அரசாங்கம் மிகத் தீவிரமாக பாடுபடுவதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே அம்பலப்படுத்தி இருக்கிறார்.modi's master ampani?…

2 hours ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

1 day ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago