Type to search

மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களின் பெற்றோர்

India Trending Tamil nadu

மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களின் பெற்றோர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆம்பூர் அருகே பள்ளி மாணவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.parents students tied student pole

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோணாமலை பகுதியை செர்ந்த தினேஷ், மாதனூரில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.

இவன் நேற்று பள்ளிக்கு சென்ற போது அதே வகுப்பில் படித்து வரும் சக மாணவர்களான தயாளன்,பரத்,சாரதி ஆகிய முவறும் சேர்ந்து தினேஷை கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மற்ற 3 மாணவர்களையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை பள்ளி முடிந்த சென்ற போது, தினேஷ் குறித்து, மற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியதாகவும், இதனால் அம்மாணவர்களின் பெற்றோர்கள் தினேஷை பிடித்து மின்சார கம்பத்தில் கட்டி துடப்பம், செருப்பால் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வலி தாங்க முடியாமல் அலரி துடித்த தினேஷை அங்கிருந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் 2 பேரை கைது செய்த ஆம்பூர் போலீசார் அவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like