Categories: India Top StoryIndia TrendingTamil nadu

சுயமரியாதை, கௌரவம் எங்களுக்கும் உண்டு – மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு, திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியுடன் ஞாயிறன்று துவங்கியது.self esteem honor – great rally alternative people

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின்3ஆவது மாநில மாநாடு திருப்பூரில் ஞாயிறன்று தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக ஞாயிறன்று மாலை யுனிவர்சல் திரையரங்கம் முன்பிருந்து மாற்றுத் திறனாளிகள் பேரணி தொடங்கியது.

பேரணியில் ஊனமுற்றோர் தேசிய மேடையின் பொதுச்செயலாளர் வி.முரளிதரன், மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் டி.லட்சுமணன் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர்.

பேரணி திருப்பூர் யுனிவர்சல் சாலையில் இருந்து குமரன் சாலைவழியாக டவுன்ஹால் மைதானத் தைச் சென்றடைந்தது. முன்னதாகவழி நெடுக மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

பேரணியை திருப்பூர் குமரன் சாலை – கோர்ட் சாலை சந்திப்பில் ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழுவினரும், வடக்கு காவல் நிலையம் அருகில் ஜன நாயக வாலிபர் சங்கத்தினரும் வரவேற்று, மாநாடு வெற்றி பெற வாழ்த்துமுழக்கமிட்டனர்.

பேரணியின் முகப்பில் திருப்பூர்கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. உடல் உறுப்புகளில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில்ஊனமில்லை என்று உற்சாகத் தோடும், எழுச்சியோடும், கட்டுப் பாட்டுடனும் மாற்றுத் திறனாளிகள் பேரணியாய் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வெகுவாக ஈர்த்தது.

டவுன்ஹால் அரங்கில் மாநாட்டுப் பேரணி நுழைந்ததும், பொதுமாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாற்றுத்திறனாளி கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. டவுன்ஹால் மைதானம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொது மாநாடு:

இதைத் தொடர்ந்து நடை பெற்ற பொது மாநாட்டில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., ஊனமுற்றோர் தேசிய மேடை பொதுச் செயலாளர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

மாநாட்டு நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் வரவேற்றார்.

வரவேற்புக்குழுத் தலைவர் பிரபாகரன், செயலாளர் டி.ஜெயபால் உள்பட மாநாட்டு வரவேற்புக் குழுவினரும் மாநாட்டு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

திங்களன்று பிரதிநிதிகள் மாநாடுதொடங்கி செவ்வாயன்று நிறைவடைகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

12 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

15 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

17 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago