அச்சுறுத்திய உறவினர்கள்… பாதுகாத்த பெற்றோர்… – 24 விரல்கள் கொண்ட சிறுவன்
Share

மனிதர்கள் இயல்பாக தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு கை, கால்களுடன் விரல்களுக்கும் முக்கிய பங்காற்றுகிறது.Frightened Relatives Protected Parents – 24 Fingers
10 விரல்களில் ஒரு விரல் இல்லையென்றாலும் சிரமம்தான். அதே நேரத்தில் 10-ல் ஒரு விரல் அதிகமாக இருந்தாலும் சிரமமே.
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு சிறுவன் 12 கை விரல்கள், 12 கால் விரல்களுடன் மொத்தம் 24 விரல்களுடன் பிறந்திருக்கிறான்.
அதுவே, தற்போது சிறுவனுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. அந்தச் சிறுவனின் உறவினர்கள், `அவனைக் கொலை செய்து விடுங்கள்’ எனப் பெற்றோரிடம் வற்புறுத்தி இருக்கின்றனர்.
அதற்கான முயற்சியிலும் உறவினர்கள் இறங்கியுள்ளனர். இத்தகைய உடல் குறைபாட்டுடன் பிறந்த குழந்தையைக் கொலை செய்துவிட்டால் செல்வந்தராக உயரலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
உறவினர்களின் அச்சுறுத்தல் காரணமாக அந்தச் சிறுவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாதுகாத்து வைத்துள்ளனர் பெற்றோர். ஒரு கட்டத்தில் உறவினர்களின் அச்சுறுத்தல் அதிகரிக்கவே போலீஸாரின் உதவியை நாடி இருக்கின்றனர் பெற்றோர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி உமாசங்கர் சிங் கூறுகையில், `இந்த விவகாரம் தொடர்பாக புகாரைப் பெற்றுக்கொண்டோம்.
நியாயமான விசாரணையை மேற்கொண்டு, சிறுவனின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொருளாதார அடிப்படையில் அவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர்.
ஆகையால், இந்த ஊரில் நான் பணியில் இருக்கும்வரை சிறுவனில் கல்விச் செலவினங்களை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – மநீம கட்சி
- கோமா நிலைக்கு வந்த அ.தி.மு.க ஆட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
- சுயமரியாதை, கௌரவம் எங்களுக்கும் உண்டு – மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி
- ஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா? – நரேந்திர மோடி
- குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது
- நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆகியிருப்பேன் – டி.டி.வி.தினகரன்
- சிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டவில்லை
- மோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்