Type to search

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அமில வீச்சு

INDIA India Trending

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அமில வீச்சு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் மீது அமிலம் வீசப்பட்டதில் 8 பேர் காயம் அடைந்தனர்.acid rain attack congress victory karnataka elections

கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை காங்கிரஸ் 982 இடங்களிலும் பா.ஜ.க. 929 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 375 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சுயேச்சைகள் 328 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தும்கூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் அமிலம் வீசியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமில வீச்சுக்கு பா.ஜ.க.வினர்தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: