கார், மொபைல் உட்பட அனைத்தும் பறிக்கப்படும் – சிம்புவை எச்சரிக்கும் நீதிமன்றம்
Share

நடிகர் சிம்பு மீது பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.simbu car-mobile everything else warning court
அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், `நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து `அரசன்’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
அதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக பேசி, முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013 -ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி கொடுத்தோம்.
ஒப்பந்தத்தின்படி அவர் அரசன் படத்தில் நடித்திருக்க வேண்டும். ஆனால், அவர் படத்தில் நடிக்க முன்வராமல் தொடர்ந்து இழுத்தடித்தார்.
அவர் கூறியபடி படத்தை நடித்து கொடுக்காததால் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே அவரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தரவேண்டும்’ என்று கூறியிருந்தது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, நடிகர் சிம்பு வாங்கிய ரூ.50 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சத்தை 4 வாரத்திற்குள் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை கொடுக்கவில்லையென்றால், நடிகர் சிம்பு வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டிஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதுமட்டுமின்றி சிம்பு பயன்படுத்தும் கார், மொபைல்போன் ஆகியவற்றையும் சேர்த்து பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கேரளாவிற்காக சேகரித்த ₹40 லட்சம் பணம் – தமிழ் நடிகைகள் நிதியுதவி
- பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை – தாய்க்கு போலீஸ் வலைவீச்சு
- காட்டிக் கொடுத்தது முதல்… கூட்டிக் கொடுத்தது வரை… – வாஜ்பாய் பற்றி அதிர்ச்சி தகவல்
- இறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி – மருத்துவமனை ஊழியர்கள்
- பாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் – தமிழக அரசு ஊக்குவிக்க கோரிக்கை
- இந்திய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – சபதம் ஏற்ற ஸ்டாலின்
- கேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி
- கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கினார் – விசிக தலைவர் திருமாவளவன்
- பட்டாக்கத்தி தீட்டாதே… புத்தியை தீட்டு… – மாணவர்களை தெறிக்கவிட்ட போலீசார்
- ஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும் -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை
- செம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்
- நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று