Categories: India TrendingTamil nadu

பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை – தாய்க்கு போலீஸ் வலைவீச்சு

குன்றத்தூரில், பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள தாயை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.poisoning children received child – mother police search

குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி அபிராமி (25), இவர்களுக்கு திருமணம் ஆகி அஜய் (7), என்ற மகனும், கார்னிகா (4), என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாத கடைசி என்பதால் விஜய் இரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கி விட்டார்.

இன்று அதிகாலை வீட்டிற்கு விஜய் வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறம் சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்து பார்த்து விட்டு குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பிள்ளைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நேற்று இரவு, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என சந்தேக்கின்றனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபிராமி கைது செய்தால் மட்டுமே உண்மைநிலை தெரியவரும் என்பதால், அவரை கைது செய்ய போருர் உதவி ஆணையர் தலைமையில் குன்றத்தூர் ஆய்வாளர் சார்லஸ், மாங்காடு ஆய்வாளர் கிருஷ்ண குமார் உட்பட 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

முதல் கட்டமாக விஜயிடம் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அபிராமியின் நண்பர்கள், உறவினர்களையும் விசாரிப்பதோடு செல்போன் தொடர்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

12 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

15 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

17 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago