Categories: India Top StoryIndia TrendingTamil nadu

நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

நீட் தேர்வால் மருத்துவர் கனவு கனவாக போனதை எண்ணி இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு போராளி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.neet fighter anita’s first year anniversary today

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா.

தந்தை சண்முகம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. ஏழ்மையான குடும்பம்.

வறுமையின் கோர பிடியிலும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு படித்த அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார்.

‘டாக்டராக வேண்டும்’ என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு பெரும் தடையாக அமைந்தது.

காரணம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, சிபிஎஸ்சி பாடத்திட்டம் பெரும் தடையாக அமைந்தது.

இதனால், ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அனிதாவால், நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆனாலும் மனம்தளராத அனிதா, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்.

இருப்பினும் நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

கனவு கானல்நீரனாதை எண்ணி மனமுடைந்த அவர், கடந்த ஆண்டு இதே நாள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

அவரது இழப்பு குடும்பத்துக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தையே துக்கத்தில் ஆழ்த்தியது.

அவரது இழப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், நீட் தேர்வில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சமூகத்தின் கீழ்நிலை மாணவர்களுக்கு கல்வி மட்டுமே ஏணியாக இருக்கும் போது, இது போன்ற தேர்வுகள் அவர்களை கல்வியிலும் கீழ்நிலையிக்கே இட்டுச் செல்ல வழி வகுக்கிறது.

கல்வியாளர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வுக்கு உரிய வழியை கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

13 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

14 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

16 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

17 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

18 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

18 hours ago