Categories: India Top StoryIndia TrendingTamil nadu

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.100 percentage power supply erode district – district collector tamil news

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்டஆட்சியர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் 100 சதவிகிதம் மின் இணைப்பு உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மலைப்பகுதியான தாளவாடி யூனியனில் ராமர் அணையில் 18 வீடு, மல்லியன்மன் துர்க்கையில் 126 வீடு, கத்திரிமலையில் 86 வீடுகளுக்கு மட்டுமே மின்சார இணைப்பு வழங்க முடியவில்லை.

அம்மலைகளுக்கு வாகனம் செல்லவும், மின்பாதை அமைக்கவும் வசதி இல்லை.இதனால், அங்கு ஒவ்வொரு வீட்டுக்கும்சோலார் பேனல் அமைத்து 12 ஓல்டுபேட்டரி மூலம் தலா ஐந்து வாட்ஸ் மின் பல்பு, மூன்று இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒயரிங் பணி வழங்கி, அனைத்து வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கியதால் 100 சதவிகிதம் மின்சார வசதி உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மின்தடை நீக்க சேவை மைய எண் அறிமுகம்மேலும், ஈரோட்டில் மின்தடை நீக்க சேவை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும். மின்தடை ஏற்பட்டதும், இலவச அழைப்பான 1912 என்றஎண்ணில், தங்கள் சர்வீஸ் எண்ணை தெரிவித்தால் ஓரிரு மணி நேரத்தில் மின்தடை சீர் செய்யப்படும்.

தனி நபர் மின் தடை புகார் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சீர் செய்யப்படும். பிற புகார்களை, வாட்ஸ் ஆப் எண்ணான, 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களும் இச்சேவையை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

16 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

19 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

20 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

21 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

21 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

22 hours ago