Categories: India Head LineIndia TrendingTamil nadu

ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்

அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது.boring illusory men stalin bending lady politics dmk politics

எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பல வருடங்களாக கட்சியில் இருந்தும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரி தரப்பு குறிவைத்துள்ளது.

அவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தொலைபேசி வழியாக பேசும் அழகிரி, பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறாராம்.

அதேபோல், தற்போது பதவியில் இருக்கும் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களிடமும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் தற்போது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட பலருக்கும் பதவி கொடுத்து வருகிறாராம்.

இது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற போது அவருக்கு வாழ்த்துரை வழங்கியவர்களின் பட்டியலிலேயே எதிரொலித்தது.

இதில் கும்மிடிப்பூண்டி வேணு மிக முக்கியமானவர். திருவள்ளூர் மாவட்ட செயலளாராக இருந்த வேணு கருணாநிதியிடமே நேரிடையாக வாதாடுபவர்.

ஆனால், அவரின் வெளிப்படையான செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு பிடிக்காததால் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட மாவட்ட செயலாளராக அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது.

ஆனால், அவருக்கு பெரியாத முக்கியத்துவம் தரப்படவில்லை. இதுபோலவே ஏ.கே.எஸ் விஜயன், பழனிமாணிக்கம் ஆகியோரும் ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.

ஆனால், இவர்கள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி பேசும் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில்தான் ஸ்டாலின் ராஜ தந்திரம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது, தன்னால் ஓரங்கட்டப்பட்டவர்களை வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டிருப்பதை புரிந்து கொண்டு, அதற்கு செக் வைக்கும் வகையில் ஸ்டாலின் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

இது அழகிரி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இன்று பேட்டியளித்த அழகிரி திமுகவில் என்னை இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன் என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

8 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago