Categories: India Head LineIndia TrendingTamil nadu

மீண்டும் கும்புடுப்போட தயாராகும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்

சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.sasikala released soon – eps shock ops

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும்.

ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டதால் வேறு வழியில் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் தினகரன் ஆகியோர் டெல்லியில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சில முயற்சிகள் செய்தனர். ஆனால், அவை தோல்வியில் முடிந்தது.

எனவே, தற்போது கர்நாடக அரசின் உதவியை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர். அதாவது, கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி, முதல்வராவதற்கு முன்பே இளவரசியின் மகன் விவேக் அவரை சந்தித்து நட்பு வைத்துக்கொண்டார்.

முதல்வரான பின்பும் 2 முறை அவரை சந்தித்து சசிகலாவின் விடுதலை குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்தது, விடுமுறை நாட்கள், தலைவர்கள் பிறந்தநாள், நன்னடத்தை என பல காரணங்களை காட்டி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் விவேக் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

அரசு நினைத்தால் நன்னடைத்தை காரணம் காட்டி ஒரு கைதியை எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்யலாம்.

ஆனால், சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் விடுதலைக்கு இது தடைக்கல்லாக இருக்கிறது.

எனவே, இந்த விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, எல்லாம் சுபமாக முடிந்த பின் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என குமாரசாமி தரப்பில் விவேக்கிற்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 18ம் தேதி சசிகலா தனது பிறந்த நாளை சிறையில் எளிமையாக கொண்டாடினார். அப்போது, தினகரன், அவரின் மனைவி அனுராதா உள்ளிட்ட பலர் அவரை சந்தித்தனர்.

அப்போது, விரைவில் நல்ல செய்தி வரும். சென்று வாருங்கள் என சசிகலா நம்பிக்கை கொடுத்தாராம்.

எனவே, சசிகலா விரைவில் வெளியே வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 1996ம் ஆண்டு சில காலம் சசிகலா சிறையில் இருந்தார். அதேபோல், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹா தீர்ப்பு அளித்த போதும் சில மாதங்கள் அவர் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சசிகலா வெளியே வந்தால், தனக்கு சாதகமாக தமிழக அரசியல் களம் மாறும் என்ற நம்பிக்கையில் தினகரன் இருக்கிறார்.

உளவுத்துறை மூலம் இந்த தகவலை அறிந்த முதல்வர் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாம்.

சசிகலா வெளியே வந்தால் ஆட்டையை களைப்பார் என்பதால், அந்நிய செலவாணி மோசடி வழக்கை அடுத்த ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

13 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

16 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

16 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

17 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

18 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

18 hours ago