Categories: India Head LineIndia TrendingTamil nadu

ராஜபக்‌சே-வுக்கு ‘பாரத ரத்னா’ விருது – அடம் பிடிக்கும் சுப்பிரமணியசாமி

தில்லியில் ‘விராத் இந்துஸ்தான் சங்கம்’ என்ற இந்துத்துவா அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.rajapaksa’s bharat ratna award – subramanian swami

இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருக்கிறார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி, இலங்கைக்கே நேரில் சென்று ராஜபக்சே-விடம் அளித்து அழைப்பு விடுத்தார்.

இதனால், ராஜபக்சே நிச்சயமாக வருவார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ராஜபக்சே-வின் வருகை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியசாமி, “ராஜபக்சேவிற்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும்” என்று ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

“ராஜபக்சே மிகவும் தன்மையான, பண்பாடு மிக்க மனிதர்” என்றும், “நெல்சன் மண்டேலா, அவருடைய நாட்டினருக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததற்கு நாம் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பித்ததைப் போல், விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மக்களையும் இந்திய மக்களையும் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக ராஜபக்சே-விற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று சுப்பிரமணியசாமி காரணம் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

12 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

15 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

15 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

16 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

16 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

17 hours ago