Categories: India Top StoryIndia TrendingTamil nadu

தனிமை சிறையில் நான் படிக்கும் புத்தகம் – திருமுருகன் காந்தி பேட்டி

உபா சட்டத்தின் கீழ் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.book read solitary confinement – thirumurugan gandhi interview

குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், தற்போது உபா (UAPA) சட்டம் உங்கள் மீது பாய்ந்துள்ளது?

எல்லாமே காலனி ஆதிக்க சட்டங்கள். “உபா’வை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கமே நடத்தியிருக்கிறோம். அப்படியிருக்கும் போது எங்கள் மீது “உபா’வை போட்டு அச்சுறுத்துவது மூலமாக அனைத்தையும் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை.

சிறைக்குள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

தனிமைச் சிறையில்தான் என்னை அடைத்திருக்கிறார்கள். சரியா உணவு இல்லை. உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சிறைக்குள் யாரையும் பார்க்க அனுமதிப்பது இல்லை.

உங்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருகிறதே?

தேர்தல் வரப்போகிறது, பா.ஜ.க.விற்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக இப்படி செய்து வருகிறார்கள்.

பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவும், அவர்களின் கருத்துகளை பேசியதற்காகவும் வழக்குகள் போடபட்டு இருக்கிறதே?

தமிழர் உரிமை சார்ந்து பேசக்கூடிய விஷயங்கள் என அனைத்தையும் முடக்கவேண்டும் என்பதே அவர்களின் முழு எண்ணமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் பொம்மை அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.

உங்கள் மீது 40 வழக்குகளுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள்?

பொதுவான நபர்கள் இதைப் பார்த்தால் பயந்துவிடுவார்கள்… அதன் மூலம் இந்த இயக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.

ஆனால் எங்களுக்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றம் வரும்வழியில் கிராமத்தில் சிக்னலில் நிற்கும் போது அங்கிருந்த மக்கள் வந்துபேசுகிறார்கள் . இதற்காக அரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தேர்தல் அரசியலில் இல்லாத உங்கள் மீது ஏன் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது?

தேர்தல் அரசியலில் ஈடுபடும் அவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்க்கக்கூடியவர்கள் நாங்கள், எங்களை நேரடியாக மேடையில் அவர்களால் எதிர்க்க முடியாது. அதனால் சட்டத்தை, காவல்துறையை பயன்படுத்தி முடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சிறையில் என்ன புத்தகம் படித்து வருகிறீர்கள்?

சுனில்குமார் ஜோஷி எழுதிய 1917 முதல் 1947-வரை இருந்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா குறித்த புத்தகத்தை படித்துவருகிறேன்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

10 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

13 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

13 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

14 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

14 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

15 hours ago