Categories: INDIAIndia Top StoryIndia Trending

மத்திய அரசைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிக நிதி – கேரளத்திற்கு அள்ளித்தந்த பொதுமக்கள்

கேரளத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பையொட்டி, மத்தியில் ஆளும் மோடி அரசு ரூ. 600 கோடி மட்டுமே நிவாரண நிதி அறிவித்திருந்தது.20-percent funding federal government – population kerala

ஆனால், நாட்டிலுள்ள சாதாரண மக்கள், மத்திய அரசு வழங்கியதைக் காட்டிலும் கூடுதலாக 114 கோடி ரூபாயை கேரளத்திற்கு அள்ளித் தந்துள்ளனர்.

முதல்வரின் வங்கிக் கணக்குக்கு வங்கிக் காசோலை, வரைவோலை, செலுத்துகை சீட்டு மற்றும் முதல்வரிடமே நேரடியாக நிதியை அளித்தல் என இதுவரை ரூ. 713 கோடியே 92 லட்சத்தை, கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதியில் அவர்கள் சேர்த்துள்ளனர்.

கேரளத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் 350-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இவைதவிர, இடிந்து போன 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 90 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு உடைந்துபோன சாலைகள், நூற்றுக்கணக்கான பாலங்கள், நாசமான 50 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள் என சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் கேரளம் அரசு கூறியிருந்தது. தற்போது, ரூ. 35 ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பைக் கேரளா சந்தித்துள்ளதாக மாநில நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் விவசாயம், சுற்றுலா, ஏற்றுமதி வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், கேரளத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் (ஜிடிபி) 2.2 சதவிகிதம் வரையில் சரிவு ஏற்படும் என்று ‘அக்யூட் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் கூறியுள்ளது.

சென்ற 2017-18 நிதியாண்டில் 3.2 சதவிகிதமாக இருந்த கேரளாவின் நிதிப் பற்றாக்குறை, இந்த நிதியாண்டில் 5.4 சதவிகிதமாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள அரசு உடனடி நிவாரணமாக ரூ. 2 ஆயிரத்து 600 கோடியை மோடி அரசிடம் கேட்டது.

ஆனால், வெறும் ரூ. 600 கோடிக்கு மேல் மோடி அரசு தரவில்லை.இதனால், பேரிழப்பில் இருந்து கேரளம் மீண்டுவர பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும் அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்தனர்.

அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு, துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்த மக்கள், இவைதவிர நிதியாக மட்டும் ரூ. 713 கோடியே 92 லட்சத்தை அள்ளித் தந்துள்ளனர்.

இது மத்திய அரசு வழங்கிய நிதியை காட்டிலும் (600 கோடி) 20 சதவிகிதம் அதிகம்.
யு.பி.ஐ. இணைய வழியாக ரூ. 132 கோடியே 62 லட்சம், பேய் டிஎம் வாயிலாக 43 கோடி, பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக 518 கோடியே 24 லட்சம், முதல்வரை நேரில் சந்தித்து பணம் மற்றும் காசோலையாக ரூ. 20 கோடி என அவர்கள் இந்த நிதியை வழங்கி கேரள மக்கள் மீது அன்பை பொழிந்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

12 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

15 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

16 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

16 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

17 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

17 hours ago