Categories: India TrendingTamil nadu

கோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து

கோயம்புத்தூர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை மடக்கி பிடித்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரின் மகன் கத்திகுத்தில் படுகாயமடைந்தார்.india tamil news trying robbery temple – knocking knife

கோவை சுங்கம் பகுதியில் தியாகி சிவராம் நகர் உள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அப்பகுதியிலுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரும், தீக்கதிர் கோவை பதிப்பின் விளம்பர மேலாளருமான கே.அழகப்பன் மற்றும் அவரது மகன் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கோவில் அருகே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, இரண்டு பேர் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைகண்ட கிருஷ்ணகுமார் ஓடிச்சென்று கொள்ளையனை பிடிக்க முயன்றுள்ளார். இவருடன் அழகப்பன் மற்றும் அருகாமை வீட்டாரும் சென்றுள்ளனர்.

இதனை கண்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர் தப்பிஓடிவிட்டார். அதேநேரம், ஒரு கொள்ளையனை கிருஷ்ணகுமார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்துள்ளார்.

அப்போது, கொள்ளையன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணகுமாரின் மார்பு பகுதியில் பலமாக குத்தியுள்ளார்.

இதில் அவர் படுகாயமடைந்த நிலையிலும் கொள்ளையனை விடாமல் இழுத்து பிடித்துள்ளார்.

இதற்குள் மற்றவர்கள் அங்கு வந்து கொள்ளையனை மடக்கிபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே கத்தி குத்தில் காயமடைந்த கிருஷ்ணகுமார் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தகவலை அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, பி.ஆர்.நடராஜன், சி.பத்மநாபன், எம்.கண்ணன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கிருஷ்ணகுமாரை சந்தித்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், தற்போது சிக்கியுள்ள கொள்ளையன் தனிநபரல்ல பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி கும்பலுடன் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம்.

இக்கும்பல் 9 கார்களை உடைத்து பொருட்களை திருடிவிட்டும், மற்றொரு கோவிலை உடைத்து கொள்ளையடித்து விட்டுத்தான் இப்பகுதியில் நுழைந்து உண்டியலை உடைத்துள்ளனர்.

இவர் ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்களில் தேடப்படுகிற நபராகத்தான் காவல்துறையின் பட்டியலில் உள்ளார்.

பிடிபட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது இவர் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

8 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

9 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

10 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

11 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

12 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

13 hours ago