Categories: India Top StoryTamil nadu

கோவை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு!

{ Coimbatore teacher awarded }
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார்.

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றது.

அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.

மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகின்றேன்.

Tags: Coimbatore teacher awarded

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Kowshalya V

Recent Posts

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

19 mins ago

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.people's justice ready parliamentary elections: kamal haasan சென்னை விமான நிலையத்தில்…

35 mins ago

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர்…

57 mins ago

ஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.within year…

2 hours ago

சாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight…

3 hours ago

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

19 hours ago