Type to search

கேரளாவுக்கு கூடுதல் நிதியுதவியை அளிக்க தயார் – மத்திய அரசு உறுதி

INDIA India Head Line India Trending

கேரளாவுக்கு கூடுதல் நிதியுதவியை அளிக்க தயார் – மத்திய அரசு உறுதி

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

கேரளாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளநிவாரணத் தொகை 600 கோடி ரூபாய் வெறும் முன்னோட்டமே என்றும் கூடுதலான நிதியுதவியை அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.india tamil news ready provide financial assistance kerala – central government

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியை அளிக்க முன்வந்த நிலையில் வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதியளிக்காவிட்டால் அதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தரவேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் வலியுறுத்தியிருந்தார்.

வெள்ள நிவாரண நிதிக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கியது போதாது என கேரளா தெரிவித்த நிலையில்,மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தொகை முன்பணம்தான் என்றும், வெள்ளச்சேதம் குறித்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவை ஆய்வு செய்து, முழுமையான அறிக்கை வரும்போது, மேலும் தேவையான நிதியை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like