Type to search

18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கு – ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

India Trending Tamil nadu

18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கு – ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டடதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து வழக்கு விசாரணை 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.india tamil news 18 mlas eligibility criteria – adjournment august 31

இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். கடந்த 16 நாட்களாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்வர் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வருகிறார்.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை தனி அணியாக கருத முடியாது என்றும், கட்சிக்குள் இருந்து கொண்டே முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனுக்கொடுத்தது அரசியல் ஒழுக்ககேடு மட்டுமல்லாமல், முறையற்ற செயலும் கூட என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று வாதிட்டார்.

கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்தும் போது, அது கட்சியை விட்டு வெளியேறியதாகவே கருத முடியும் என்று வாதிட்ட சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம், அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது என்றும், அரசியலமைப்பு கடைமகளை நிறைவேற்றக் கோரி அவரிடம் மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்கான கோரிக்கையே என்றும் வாதிட்டார்.

மேலும் விளக்கமளிக்க போதுமான அவகாசம் அளிக்கப்பட்ட பிறகே சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், எனவே இது இயற்கை நீதிக்கு முரணானது அல்ல என்றும் அரிமா சுந்தரம் வாதங்களை முன் வைத்துள்ளார்.

சபாநாயகரின் உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்று தனது வாதத்தை முன்வைத்த 18 எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சித் தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

மற்றொரு வழக்கறிஞராக மோகன் பராசரன், சபாநாயகரை விட அதிக அதிகாரமுடைய தலைமை தேர்தல் ஆணையர், அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீதிபதி சத்தியநாராயணன் ஒத்திவைத்தார். அன்றைய தினமும் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like