Type to search

பம்பையில் அதிகமான வெள்ளத்தால் சபரிமலை இழுத்துமூடல்…

INDIA India Head Line India Trending

பம்பையில் அதிகமான வெள்ளத்தால் சபரிமலை இழுத்துமூடல்…

Share

பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐயப்ப கோயில் மூடப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவின் பல மாநிலங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஐயப்பன் கோயிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மரங்களும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.

இதனால், ஓணம் பண்டிகையையொட்டி, ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பூஜையை கேரள அரசு ரத்து செய்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், ஐயப்பன் கோயிலுக்கு ஓணம் பண்டிகைக்காக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, தொடர்ந்து நீடிப்பதால் ஐயப்பன் கோயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like