Type to search

என் தந்தையை கொன்ற பிரபாகரன் இறந்த போது நான் மகிழ்ச்சியடையவில்லை: காரணம் கூறும் ராகுல் காந்தி!

INDIA India Top Story

என் தந்தையை கொன்ற பிரபாகரன் இறந்த போது நான் மகிழ்ச்சியடையவில்லை: காரணம் கூறும் ராகுல் காந்தி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ Rahul Gandhi speech pirabagaran }

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, தீவிரவாதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல்காந்தி, என் தந்தையை கொன்ற விடுதலைப்புலிகளின் அமைப்பு தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போது நான் மகிழ்ச்சியடையவில்லை, மிகவும் துயரம் தான் அடைந்தேன் என கூறியுள்ளார்.

மேலும், ஒருமுறை எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அளித்த ஒரு பேட்டியின்போது, ராஜிவ்காந்தி கொலை குறித்து கேள்வி கேட்டதற்கு, ”அது ஒரு துன்பியல் நிகழ்வு” என்று பிரபாகரன் பதில் அளித்திருந்தார்,என கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

மேலும் இந்தியா குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி மதசார்பின்மை உள்ளிட்ட கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் கிடைக்க கூடாது. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Tags: Rahul Gandhi speech pirabagaran

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

 


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares