Type to search

சென்னை வந்தது வாஜ்பாய் அஸ்தி – மு.க.ஸ்டாலின் மரியாதை

India Head Line India Trending Tamil nadu

சென்னை வந்தது வாஜ்பாய் அஸ்தி – மு.க.ஸ்டாலின் மரியாதை

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

சென்னை கொண்டுவரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி, தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.india tamil news vajpayee ashti – honoring mk stalin

பாஜக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16-ம் தேதி மறைந்தார்.

அவரது உடல், 17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி 6 தலைவர்கள் தலைமையில், 6 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும் என்றும், 26-ம் தேதி மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, பவானி ஆகிய நதிகளிலும், சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி அகிய இடங்களில் கடலில் கரைக்கப்படும் என பாஜக தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் கமலாலயத்தில் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்த வசதியாக அஸ்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 28-ம் தேதி அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

அதற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like