Categories: INDIA CRIMEIndia Trending

கள்ளகாதலால் பறிபோன பல உயிர்கள்…

தன் பேரன் கடற்கரைப் பாண்டியைக் கொன்ற வழக்கில் கைதாகியிருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கனகமணி.india tamil news murder many lives lost smashing

இந்த வயதில், கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? ஏடாகூட சமாச்சாரங்களே கொலைக்கான பின்னணியாக உள்ளது.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருடைய மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான்.

சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள்.

ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் பிரியா மீது மூன்று வழக்குகள் உள்ளன. சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான்.

இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி பிரியா தூக்கில் தொங்க, தற்கொலைதான் என்று கருதிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

ஒருநாள் கடற்கரைப்பாண்டி போதையில் தன் அம்மா சரோஜாவிடம் “சித்தியை நான்தான் கொன்று தூக்கில் தொங்கவிட்டேன்.”

என்று உளறியிருக்கிறான். இந்த விஷயம், இறந்துபோன பிரியாவின் மகள் வின்சிலாவுக்குத் தெரிந்துவிட, பாட்டி சரோஜாவிடம் “உன் மகனை நீயே விஷம் வைத்துக் கொன்றுவிடு.” என்று நச்சரித்திருக்கிறாள். தன் மகனைக் கொல்வதற்கு சரோஜா சம்மதிக்கவில்லை.

கெட்டவளானாலும் பெற்றவளாயிற்றே! வின்சிலாவுக்கு ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே போனது.

தன் தாய் மாமா செல்வத்தின் உதவியுடன் கடற்கரைப் பாண்டியைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானாள்.

இந்தத் திட்டத்துக்கு, பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணியும் உடன்பட்டிருக்கின்றனர்.

துணைக்கு இன்னொரு ஆணும் இருந்தால் கொலையைக் கச்சிதமாகப் பண்ணிவிடலாம் என்ற நோக்கத்தோடு, பெரியம்மா செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பனையும் தயார்ப்படுத்திவிட்டு, கொலை செய்வதற்கு நாள் குறித்தனர்.

இறந்த பிரியாவுக்கு 30-ஆம் நாள் விசேஷம் வைத்தனர். கடற்கரைப்பாண்டியும் வந்து கலந்துகொண்டான்.

அன்றிரவு, சரோஜாவுடன் மற்ற பெண்களும், பாட்டி கனகமணியின் வீட்டுக்கு தூங்கச் சென்றனர்.

இந்த நேரத்தில், செல்வமும் மாரியப்பனும் கடற்கரைப்பாண்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, வின்சிலாவின் டூ வீலரில் பிணத்தை எடுத்துச்சென்று, பக்கத்தில் உள்ள புதிய தாதிக்கண்மாயில் வீசிவிட்டு திரும்பினர்.

விடிந்ததும் மகன் கடற்கரைப்பாண்டியைத் தேடினார் சரோஜா. கண்மாயில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்துக் கதறினார்.

ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் தந்தார். போலீசார் விசாரித்தபோது, பிரியாவின் விசேஷத்துக்கு சம்பந்தமே இல்லாமல் செல்வியின் கள்ளக்காதலன் மாரியப்பன் வந்தது உறுத்தியிருக்கிறது.

விசாரணையில் கடுமை காட்டியவுடன், திட்டம் தீட்டியதையும் கொலை செய்ததையும் ஒத்துக்கொண்ட மாரியப்பன், அனைவரையும் காட்டிக்கொடுத்தான்.

பிறகு, ‘நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் கடற்கரைப்பாண்டியைத் தீர்த்துக்கட்டினோம்’ என்று கனகமணி உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டுதல், சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கொலையான கடற்கரைப்பாண்டியின் பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணி, அக்கா வின்சிலா, தாய்மாமன் செல்வம் மற்றும் பெரியம்மாவின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வழி தவறிய வாழ்க்கையால், பிரியாவும், கடற்கரைப்பாண்டியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். உறவினர்களோ, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

12 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

15 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

15 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

16 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

16 hours ago

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஹெச்.ராஜா

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.no-need hiding ஹெச்.ராஜா india tamil news தமிழகத்தில்…

17 hours ago