Type to search

பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்..

INDIA India Top Story India Trending

பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்..

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் டெல்லியில் மரணம் அடைந்துள்ளார். டெல்லியில் வசித்து வந்த குல்தீப் நய்யார் 95 வயதில் மரணம் அடைந்துள்ளார்.

குல்தீப் பாகிஸ்தானின் பஞ்சாப் அருகே உள்ள சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923ல் பிறந்தார். அதன்பின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்.

குல்தீப் உருது பத்திரிக்கையாளராக  சிறுவயதில்  தன் பணியைத் துவங்கியவர். இவர் சட்டம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி பார்வையாளரான இவர்.

கவனிக்கப்பட வேண்டிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். குல்தீப் மொத்தம் 11 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இதில் அவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதியதும், நேருவின் அரசியல் குறித்து எழுதியதும், கார்கில் போர் குறித்து எழுதியதும் மிக முக்கியமான புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.

‘நேருவுக்குப் பிறகு இந்தியா’ ‘எல்லைகளுக்கு இடையே’, ‘தூரத்து உறவினர்கள் துணைக் கண்டத்தின் கதை’ ஆகிய புத்தகங்கள் பெரிய கதையையே கிளப்பியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: