Type to search

​சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

India Head Line Tamil nadu

​சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

{ court ordered Tamil Nadu government }
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்குமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகேயுள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 ஏக்கர் அரசு நிலத்தை, ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அதை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இதில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறியதை அடுத்து, 3-வது நீதிபதி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: court ordered Tamil Nadu government

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares