நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் ஊழல்: திமுக எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்துள்ளது!
Share

{ Corruption highway contract }
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலமைச்சரின் உறவினர் சுப்ரமணியம் என்பவர் பங்குதாரராக உள்ள வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு 3,120 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதன் மூலம், முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடைந்துள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அவர்மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags: Corruption highway contract
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை மீட்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
- பள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி!
- பாரதிய ஜனதா செயற்குழு 8-ந் திகதி கூடுகின்றது!
- முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்தன!
- என் தந்தையை கொன்ற பிரபாகரன் இறந்த போது நான் மகிழ்ச்சியடையவில்லை: காரணம் கூறும் ராகுல் காந்தி!
- கேரளா வெள்ளம்: சபரிமலையின் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம்!
- பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்.
- மோடியை கட்டி அணைத்தது என் கட்சியினருக்கே பிடிக்கவில்லை! – சொல்கின்றார் ராகுல் காந்தி