Type to search

கேரளா வெள்ளத்தில் கால்வைக்க தயங்கிய மணமகளை தூக்கிசென்ற மணமகன்…

INDIA India Head Line India Trending

கேரளா வெள்ளத்தில் கால்வைக்க தயங்கிய மணமகளை தூக்கிசென்ற மணமகன்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை நின்றபோதிலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் குறையாமல் அம்மாநில மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் தான் நடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கொச்சியில் ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த ஒரு திருமணம் இன்று நடைபெறுகிறது,  இந்த திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்து காரில் மண்டபத்திற்கு வந்தபோது மண்டபத்தின் எதிரே முழங்கால் அளவு தண்ணீர் இருந்துள்ளது.

இதனால் மணப்பெண் காரில் இருந்து இறங்க தயங்கியபடி இருந்தார்.

அப்போது மண்டபத்தில் இருந்த மணமகன், கொஞ்சம்கூட கஷ்டத்தை பார்க்காமல் , தண்ணீரில் இறங்கி மணமகளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவரை நனையாமல் மண்டபத்திற்குள் தூக்கி சென்றார்.

இதுகுறித்து வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக மணமகன் சுமந்து சென்ற காட்சியை திருமணத்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து திக்குமுக்காடியுள்ளனர்

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: