முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்தன!
Share

{ 9 cattle broken trunk }
திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 182ஆண்டு பழைமையான மேலணையின் 8தூண்களும் 9மதகுகளும் உடைந்து இடிந்துவிழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
திருச்சி முக்கொம்பில் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரியும் இடத்தில் 1836ஆம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்கிற ஆங்கிலேயப் பொறியாளரால் அணை கட்டபட்டது.
634மீட்டர் நீளமுள்ள இந்த அணை 45 மதகுகள் கொண்டதாகும். இந்த அணையில் கொள்ளிடம் பாலத்தின் கீழுள்ள மதகுகளில் நொடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் செல்ல முடியும். அதே போல் காவிரியாற்றிலும் நொடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் செல்ல முடியும். கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரியும் மூன்று கிளை வாய்க்கால்கள் உள்ளன.
ஜூலை 19ஆம் நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதில் இருந்தே முக்கொம்பில் காவிரியாற்றிலும் கொள்ளிடத்திலும் அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.
கர்நாடகத்தில் மிகப் பலத்த மழை பெய்து நொடிக்கு இரண்டு இலட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதே அளவு நீர் மேட்டூர் அணையில் இருந்தும் திறக்கப்பட்டது.
பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக முக்கொம்புக்கு நீர்வரத்து நொடிக்கு இரண்டு இலட்சம் கனஅடிக்கு மேல் இருந்தது. இந்த நீரில் பெருமளவு முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் திறந்துவிடப்பட்டது.
அதிக அளவாக நொடிக்கு ஒரு லட்சத்து 67ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
Tags: 9 cattle broken trunk
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- என் தந்தையை கொன்ற பிரபாகரன் இறந்த போது நான் மகிழ்ச்சியடையவில்லை: காரணம் கூறும் ராகுல் காந்தி!
- கேரளா வெள்ளம்: சபரிமலையின் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம்!
- பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம்.
- மோடியை கட்டி அணைத்தது என் கட்சியினருக்கே பிடிக்கவில்லை! – சொல்கின்றார் ராகுல் காந்தி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :