Type to search

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

INDIA India Top Story

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ today baktheer padigai kondatattam }

நாடு முழுவதும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி மசூதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.

ஈதுல் அதா என்றும் அழைக்கப்படும் இந்த பக்ரீத் திருநாளின்போது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் வழியில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை ‘குர்பானி’ என்ற புனிதப்பலி தந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

வெவ்வேறு நாட்டினர் இந்த பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் கொண்டாடுவது வழக்கம். ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.

அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

Tags: today baktheer padigai kondatattam

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares