Categories: India TrendingTamil nadu

ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்

சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.india tamil news varagi challenges raghava lawrence sri reddy issue

ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை தெலுங்கு திரையுலகமும் ஆந்திர அரசும் கூட புறந்தள்ளிவிட்டன.

இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார்.

இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

இதுவே ஒரு தவறான முன் உதாரணம் தான். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில் கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும்.

நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.

அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்.

இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும்.

எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்”. என இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

22 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

1 day ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 day ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

1 day ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

1 day ago