Categories: India Top StoryIndia TrendingTamil nadu

நள்ளிரவில் விஷப்போதை மருந்து சப்ளை – சிக்கிய உ.பி. இளைஞர்

பாம்பு விஷம் கொண்ட போதை பொருளுடன் வட மாநில இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.india tamil news snake poisoning midnight drug supply youth

சென்னையில் போதை மருந்து நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து, நேற்று இரவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

திருவான்மியூர் பஸ் டெப்போ அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதையடுத்து அந்தக் காரில் இருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

நட்சத்திர ஓட்டல் பார்ட்டி :

ஆனால் நிஷால் திவாரி என்ற ஒரு இளைஞர் மட்டும் பிடிபட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

அவரிடம் இருந்து ஏராளமான போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த மாத்திரைகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது காவல்துறையினருக்கு உறுதியாக தெரியவில்லை.

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நடன விருந்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு இவற்றை சப்ளை செய்ய கொண்டு வந்ததாக திவாரி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு :

இந்த போதை மருந்துகளில், பாம்பு விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

ஆய்வின் முடிவில் தான் அது பாம்பு விஷம் கலந்ததா என்பது தெரியவரும்.

அரிதான விஷயம் :

பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றபோதிலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாம்பு விஷம் கலந்த போதை மருந்து என்பது அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

உடல் பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதும், அதில் பாம்பு விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் பாம்பு விஷம் :

அந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் இப்போது பாம்பு விஷம் கலக்கப்பட்ட தன்மை கொண்ட போதைமருந்து சென்னையில், சிக்கியுள்ளது.

ஏழு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை இந்த போதை இறங்காது. எனவே தான் பாம்பு விஷத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.

அரைலிட்டர் பாம்பு விஷம் சர்வதேச சந்தை மதிப்பில் பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

3 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

4 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

4 hours ago

முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief…

5 hours ago

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim - narendra modi opened india tamil news…

6 hours ago

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil…

7 hours ago