Categories: India Top StoryIndia TrendingTamil nadu

இது சிலையா – மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்

சென்னை, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு, கருணாநிதியின் உருவச் சிலைகளை, சிற்பி ஒருவர் கொண்டு வந்தார். பொதுமக்கள் அந்தச் சிலைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.india tamil news dmk leader karunanithi back marina

சென்னை, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வந்து, அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இன்று, திருவள்ளூர் செங்குன்றத்தைச் சேரந்த சிலைவடிவமைப்பாளர் முருகன் என்பவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்தார்.

அவர், ஆளுயரத்துக்கு கருணாநிதியின் உருவத்தில் இரண்டு சிலைகள் செய்து எடுத்துவந்தார். கருணாநிதி உட்கார்ந்திருந்து எழுதுவதற்கு யோசிப்பது போன்று ஒரு சிலையும், நிற்பது போன்ற மற்றொரு சிலையும் கொண்டு வந்திருந்தார்.

அந்த இரண்டு சிலைகளும் அச்சு அசலாக கருணாநிதியின் உருவத்தை ஒத்திருந்தது. `அச்சு அசலா தலைவர் மாதிரியே இருக்கு பாரேன்…’ என்று பேசியபடி பொதுமக்கள் கடந்து சென்றனர்.

இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் முருகனிடம் பேசும்போது, ‘செங்குன்றம் அருகில் சிலை வடிவமைக்கும் தொழில் செய்துவருகிறேன்.

கருணாநிதியின் சிலைகளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்க விரும்பினேன்.

அதற்காகத்தான் கொண்டுவந்தேன். இதுதொடர்பாக எம்.எல்.ஏ சேகர் பாபுவைத் தொடர்புகொண்டேன்.

அவர், ஒரு சில நாள்களில் சிலையை வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.

கருணாநிதியின் உருவத்தில் எட்டு சிலைகள் செய்துள்ளேன். உட்கார்ந்திருப்பது போலவும், நிற்பது போலவும், நின்று கொண்டு கையை உயர்த்திக் காண்பிப்பது போலவும் வித்தியாசமான முறைகளில் சிலை செய்துள்ளேன்.

அனைத்தும் பைபரில் செய்யப்பட்ட சிலைகள். உட்கார்ந்திருக்கும் சிலை செய்வதற்கு ஒன்றரை லட்ச ரூபாயும் நிற்கும் சிலை செய்வதற்கு 80,000 ரூபாயும் செலவானது. இந்தச் சிலைகள் செய்வதற்கு 25 நாள்கள் தேவைப்பட்டது’ என்று தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

7 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago