Type to search

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு…

India Head Line Tamil nadu

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்,
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகில் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் வீண்வாததால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசு பொய் தகவலை தருகிறது இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நடிகர் மன்சூர்அ அலிகான் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்: ராகுல்காந்தி அறிவிப்பு!
சிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்
முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் – கமல்ஹாசன் பேட்டி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: