Type to search

மும்பை அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; சிக்கித் தவித்த மக்கள்!

INDIA India Top Story

மும்பை அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு; சிக்கித் தவித்த மக்கள்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ Fire Mumbai apartment building }

மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற 17மாடிக் கட்டிடம் இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கித் தவித்த மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையின் பரேல் பகுதியில் ஹிந்துமாதா திரையரங்கம் அருகே இத் தீவிபத்துச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு 17 மாடி கிறிஸ்டர் டவர் கட்டிடத்தில் பல்வேறு அடுக்குகளில் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை சுமார் 8:30 மணியளவில் தகவல் வந்தது.

தீ மேலும் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததையடுத்து வானில் புகைமூட்டம் பரவியது. கட்டிடத்தின் படிக்கட்டுக்களில் குடியிருப்பு வாசிகள் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள், கட்டித்தில் எரிந்த தீப்பிழம்புகளின் மீது நீர் ஊற்றி அணைத்தனர். கடும் முயற்சியில் இறங்கி உள்ளே சிக்கிய மக்களை காப்பாற்றினர்.

மீட்கப்பட்டவர்களில் தீவிர காயமடைந்த 20 பேர் கேஇஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 1 பெண் உள்ளிட்ட 4 பேர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கேஇஎம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அவினாஷ் சூபே தெரிவிக்கையில், ”காயமடைந்தவர்களில் 6 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல், மற்றும் பல்வேறு தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 11 பேரும் அவசர மருத்துவப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என்றார்.

Tags: Fire Mumbai apartment building

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares