Type to search

நாமக்கல் செயற்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

India Head Line India Trending Tamil nadu

நாமக்கல் செயற்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாமக்கல் திமுக கட்சி கூட்டத்தில் இப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது. தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் , இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு ஆதரவாக நாமக்கல்லில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின்தான், அவர்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாமக்கல் திமுக கட்சி கூட்டத்தில் இப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று திமுகவினர் தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கிறார்கள். அதற்கான கூட்டங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: